ரத சப்தமி | Ratha Saptami

சூரிய பகவான் அவதரித்த தை மாதம் வளர்பிறை சப்தமி திதி அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன், அன்று முதல் வடக்கு திசை திரும்பிப் பயணிப்பதாக புராணம் தெரிவிக்கிறது.

சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் நம் மீது பட வேண்டும் அதற்க்கு சூரியனுக்கு பிடித்த எருக்கம் பயன்படுத்துவது பெரும் பேரு கிடைப்பது உறுதி.

அன்று காலை சூரிய உதயம் முன் எழுந்து நித்திய கடன்கள் முடித்து, ஏழு எருக்கம் இலைகள் எடுத்து அத்துடன் அட்சதையும் விபூதியையும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும் அப்போது சூரிய கதிர்கள் நம் உடல்மீது பட வேண்டும்.

புராணம் சொல்லும் பரிகாரம் :
ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்.

“ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை தலையில் வைத்துக் குளிக்கும் பக்தர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும்” என்று வியாசர் அருளினார்.

காலை குளித்தவுடன் சூரியனுக்கு உகந்த நிவேதனம் “சர்க்கரைப் பொங்கல்” படைத்து அரளி புஷ்பம் / செந்தாமரை வைத்து பூஜை செய்து. அந்த நிவேதனத்தில் ஒரு பங்கு பசு மாட்டிற்கு கொடுத்து அதற்கு பிறகு கோயில் சென்று இறை வழிபாடு செய்தபிறகு தான் நம் நித்திய கடமைகள் செய்யவேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆரோக்கியம், செல்வ வளம், தொழில் விருத்தி, ஆன்ம பலம் கிடைக்கும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும் நல்ல லாபம் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *