மாசி மகம் ஒரு சிறப்பான நாள்

Magha

எல்லா மாத பௌர்ணமிகளையும் விட அதிக வெளிச்சம் உடையது மாசி நிலவு. ஆகையால்தான் பெரும்பாலான கோவில் தெப்ப உற்சவங்களையும், ரத உற்சவங்களையும் இந்த நாளில் வைத்தனர் இந்துப் பெரியோர்கள். மாசி மாதம் உற்சவம் இல்லாத கோவில்களே இராது.

மாசி மாதத்தில் பௌர்ணமி ஏற்படுகையில் நிலவு மக நட்சத்திரத்திற்கு அருகில் இருப்பது போலத் தென்படுவதால் மாசி மகம் என்ற பெயரும் ஏற்பட்டது (வான சாத்திரப் படி சந்திரன் (நிலவு) என்பது பூமியில் இருந்து இரண்டரை லட்சம் மைல் தொலைவில் உள்ளது. ஆனால் ‘ரெகுலஸ்’ என்று அழைக்கப்டும் மக நட்சத்திரமோ கோடி கோடி கோடி மைல்கள் தள்ளி இருக்கிறது).

மாசி மாத பண்டிகைகள்: ஹோலி, காரடையான் நோன்பு, காமதகனம், நடராஜர் அபிஷேகம், மாசி மகம், பல கோவில்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம், திரு மோகூரில் கஜேந்திர மோட்ச லீலை, பிரம்ம ஸாவர்ணி மன்வாதி, தீர்த்தவாரி, பால்குடம். திருச்செந்தூர், கோயம்புத்தூர், பெருவயல் தேரோட்டம், திருக்கண்ணபுரம், குடந்தை கோவில்களில் விழா.மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விழாக்கள், நடராஜர் உள்ள கோவில்களில் அபிஷேகம். சுருஙகச் சொன்னால் கோவில் எங்கும் விழாக்கள். இன்னும் ஒரு சிறப்பு: — வைஷ்ணவர்களும், சைவர்களும், சாக்தர்களும், கௌமாரர்களும் (குமரன் எனும் முருகனை வழிபடுவோர்) விழா எடுக்கும் ஒரே நாள்—மாசி மகத் திரு நாள்!

மாசி மகத்தின் சிறப்புகள் :
1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில் தான்.
2. மாசி மதித்து சங்கடகர சதுர்த்தி மிக விசேஷம் அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில் தான்.
5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப் படுகிறது.
6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவா பெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில் தான்.
12. காரடையான் நோன்பு சாவித்திரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள்.மாசி மகத்தன்று காமதகன் விழா நடைபெறுகிறது.
13. மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வடைகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள்.எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகபிரவேசம் நடத்தலாம்.
14. இம் மாதத்தை மாங்கலய மாதம் என்றும் கூறுவார்.
15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வார் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி .இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16. மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம்.அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா நடத்துவர்.இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தப் பின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் ,வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
19. மாசி மக நன்னாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு ,இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை மனமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் ,கல்வியில் சிறந்து விளங்கலாம்.

மாசி மகத்தன்று செய்ய வேண்டியவை:
மாசி மகத்தில் புண்ணிய தீர்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்.பாவங்கள் தொலையும்.இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் ,பிதுர்கடன் ஆகியவை செய்தால் ,அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும்.உயர்ந்தவன் -தாழ்ந்தவன்,ஏழை -பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம்.

வாழ்க ஜோதிடம்.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *