பிரஸன்னம்

ஜோதிடத்தில் இரண்டு விஷயங்கள் வைத்து ஆய்வு செய்து பலிதம் சொல்வது வழக்கம்:
1. ஜெனன ஜாதகம்
2. அன்றைய கோட்சார கிரக நிலை

இதில் ஜெனன ஜாதகத்தில் யோக கொடுப்பினை மற்றும் தசா, புத்தி ஆய்வு செய்து பலன் சொல்வது முதல் முறை. தினசரி கிரக சுழற்சி மட்டும் வைத்து பலன் சொல்வது “கோட்சார கிரக” பலிதம் என்கிறோம் இதையே சுருக்கமாக “பிரசன்னம்” என்கிறோம்.

ஜெனன ஜோதகம் இல்லாதவர்களுக்கும், பிறந்த நேரம்/தேதி சரியாக குறிக்கப்படாத ஜாதகர்களுக்கு பிரசன்ன பலிதம் பெரிதும் கைகொடுக்கும். பிரசன்ன ஜோதிட பலிதத்தில் கேள்விக்கு பதில் சரி / தவறு, வெற்றி / தோல்வி, லாபம் / நஷ்டம், செய்யலாம் /வேண்டாம் என்று சில நிமிடங்களில் சொல்லிவிடலாம்.

பிரசன்ன ஜோதிடத்தில் கிரக நகர்வு துல்லியமாக இருப்பதால் பலிதம் 100% சரியாக சொல்லமுடியும், ஜெனன ஜாதகம் போல் நீண்ட நேர ஆய்வு செய்ய அவசியம் இல்லை. சரி அப்படி என்ன பிரசன்னத்தில் கேள்வி கேட்கலாம்:
1. ஒரு செயல் / காரியம் அனுகூலமாக அமையுமா?
2. ஒரு சம்பவம் நடக்குமா? நடக்காதா?
3. காணாமல் போனவர் பற்றிய விவரம்?
4. காணாமல் போன விலை மத்திப்பில்லாத பொருள் பற்றிய விவரம்?
5. புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையுமா?
6. குழந்தை பிறப்பு / கர்ப்பம் நிலைக்குமா?
7. Interview சென்று வந்தவர்கள் அந்த வேலை கிடைக்குமா?
8. வெளிநாட்டு யோகம் எப்படி?
9. பிரயாணம் வெற்றி கிடைக்குமா?
10. திருமணம் சாதகமாக அமையுமா?
11. பதவி பிரமாணம்/ இடமாற்றம் எப்படி?
12. நோய் / ஆயுள் / செய்வினை எப்படி?

…..இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு ஆம் / இல்லை என்று சில நிமிடங்களில் சொல்லிவிடலாம். பிரசன்ன ஜோதிடம் சகுன ஜோதிடம், நிமித்த ஜோதிடம், சோழி ஜோதிடம் என்று பல பிரிவுகள் இருப்பினும் KP மற்றும் ஜாமக்கோள் ஆருடம் மிக பிரபலமானது.

உங்கள் கேள்விகளுக்கு KP ஜோதிடம் / ஜாமக்கோள் ஆருடம் மூலமாக பலிதம் சொல்ல அணுகவும்:

for Consulting Fees

3 thoughts on “பிரஸன்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *