பிரம்மஹத்தி தோஷம் | Brahmanahatya / BrahmaHatya Dhosam

தோஷங்களிலேயே இது மிகக்கொடியதாக கருதப்படுவது பிரம்மஹத்தி தோஷம்

பழந்தமிழ் நூல்களில் அறம் என்று சொல்லக்கூடிய தருமநெறி தவறி செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை தரக்கூடியது இந்த தோஷம்,

பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகர் படும் துயரம்:
1. இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி இல்லை எப்போதும் தம்பதிக்குள் சண்டை சச்சரவு.
2. புத்திரப்பேறு தடை.
3. தொழில் வீழ்ச்சி அல்லது பெரும் நஷ்டம்.
4. அடுத்தடுத்து வீட்டில் துர்மரணம்.
5. இனம் புரியாத பயம், கலக்கம், தொடர் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி.
6. நமக்கு கிடைக்கவேண்டிய வெற்றி மற்றவருக்கு எளிதாக கிடைப்பது.
7. உடலில் ஏதாவது ஒரு நோய் இருந்துகொண்டே இருப்பது.
8. கடுமையான பொருளாதார நெருக்கடி.
9. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தல்.
10. வாழ்க்கையில் முன்னேற்றம்/ வளர்ச்சி இன்மை.

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம்:

Arulmigu Magaalinga Swamy திருவிடைமருதூர் கோயில்

கும்பகோணம் to மயிலாடுதுறை சாலையில் அமைத்துள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் ஒரு சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் முறைப்படி பூஜை செய்தால் தோஷம் விலகி சகல நன்மை பெறலாம்.

மற்றோரு பரிகாரம்:

1) நல்லெண்ணெய்;
2) விளக்கெண்ணெய்;
3) நெய்;
4) இலுப்பை எண்ணெய்;
5) வேப்பெண்ணை;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, பிரதோஷம் நேரமான மாலை 4.30மணி முதல் 6.00 மணிக்குள் சிவன் கோவிலில் கீழ்கண்ட 19 இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்:

1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7. சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.

மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *