பரிகாரம்

பரிகாரம் என்பது வெயில்/மழைக்கு “குடை” உதவுவது போல ஒரு தீர்வு தான்.

அந்த தீர்வு தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது  பெய்யும் மழை பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது. தூறல், சிறிய மழைக்கு “குடை” தாக்கு பிடிக்கும், அதே சமயம் “புயல் மழைக்கு” குடை உதவாது.

புயல் மழைக்கும் பரிகாரம் உண்டு அது ஒன்று அந்த வீடு/ ஊரை விட்டு சில காலம் வேறு இடத்துக்கு செல்லவேண்டும் அல்லது வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் மிக குறைவு தான்.

எந்த பரிகாரமும் முழுமையா பலன் கொடுக்க நம் முன்னோர்கள் ஆசியும், தெய்வ அருளும், நம்பிக்கையும், நம் பூர்வ புண்ணியமும் துணை மிக அவசியம்.

நமது ஜெனன கால ஜாதகத்தில் லக்னம், லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி நல்ல முறையில் அமைந்து நடப்பு புத்தி சாதகமா அமையவில்லை எனில் கஷ்டங்கள், பிரச்சனைகள் பரிகாரம் மூலம் தீர்வு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உதாரணம் ஒருவருக்கு குழந்தை பேரு இல்லை அல்லது தாமதம் என்றால் அது பூர்வ ஜென்மத்தில் அவர் குழந்தைக்கு துன்பத்தை கொடுத்து இருப்பார் அல்லது குழந்தை கஷ்டபட காரணமாக இருந்திருப்பார்.

அந்த குழந்தையின் வேதனை தோஷமாக இப்பிறவியில் குழந்தை தாமதம் தந்துவிடுகிறது, இதற்க்கு பரிகாரம் அந்த ஜாதகர் “தாம் செய்த கொடிய வினையால் இந்த துன்பம் நடக்கிறது என்னை மன்னித்து குழந்தை பேரு தர வேண்டும்” என்று இறை சன்னிதானத்தில் கண்ணீர் விட்டு அழுது சாஸ்த்திரம் கூறிய விதிப்படி பரிகாரம் செய்தால் குழந்தை பேரு நிச்சயம், அதற்க்கு ஜெனன ஜாதகத்தில் லக்னம், லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி நல்ல முறையில் அமைந்து இருப்பது அவசியம்.

எளிய முறையில் பரிகார ஆலோசனை தர அணுகவும்:

for Consulting Fees

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *