நோய் விலக | நோயில் இருந்து விரைவில் விடுபட

இன்று(ஞாற்றுக்கிழமை) “ஆதித்ய ஹ்ருதயம்” பாடினால் நோய் நொடி, தரித்திரம், கடன் சுமை விலகும். ஆன்ம பலம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். எவ்வளவு கொடிய நோய் இருப்பினும் இன்று(ஞாயிறுக்கிழமை) குரு ஹோரையில் மருந்து உட்கொண்டால் வெகு விரைவில் நாள்பட்ட நோய் விலகும்.

இராமாயணத்தில் ஸ்ரீ ராமர் போர் புரிய தயங்கியபோது அகத்திய முனிவரால் உபதேசம் பெற்ற அற்புதமான சக்தி வாய்ந்த மந்திர மருந்து “ஆதித்ய ஹ்ருதயம்”. இந்த மந்திரத்தின் மகிமையால் ஸ்ரீ ராமர் எளிதில் இராவணை தோற்கடித்தார்.

காஞ்சி மஹா பெரியவர் ஆதித்ய ஹ்ருதத்தை முழுவதும் பாடமுடியாவிட்டாலும் குறைந்ததபட்சம் கீழ்கண்ட 7 பாடல்களாவது தினமும் பாடவேண்டும் கேட்டுக்கொள்வார். இந்த 7 பாடலும் விசேஷ மந்திர சக்தி உண்டு.

நக்ஷத்ர க்ரஹ தாராணா அதிபோ விசுவபாவன:
தேஜஸாமபி தேஜஸ் வித்வாத சாத்மந் நமோஸ்துதே:
— (அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள் எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக் காப்பாற்றுகிறவர். அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு உருவங்களாக இருப்பவர். இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே நமஸ்காரம்)

நம: பூர்வாய கிரயே பஸ்சி மாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதிபதயே நம:
— (கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.)

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ் ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:
— (என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே, பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம். ஆயிரக்கணக்கான கிரணங்களைக் கொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.)

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
— (பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே, உலகிலேயே முதலில் உண்டானவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.)

ப்ரஹ்மேசா நாச்யு தேசாய ஸூர்யாயா தித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:
— (பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே, சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும் கொடுக்கப்படும் ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே,
நமஸ்காரம்.)

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமி தாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:
— (இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே, அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியை மறப்பவரை வீழ்த்துபவரே, நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.)

தப்தசாமீ கராபாய வஹ்னயே விஸ்வ கர்மணே
நமஸ்தமோபி நிக்னாய ரவயே லோக ஸாக்ஷிணே
— ( உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப் போக்குபவரே, பிரகாசம் மிகுந்தவரே, உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம். )

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *