சனிபகவானின் கெடுபலன் குறைய

சனிபகவானின் கடுமையான சோதனையில் இருந்து தற்காத்துக்கொள்ள நமது முன்னோர்கள் எளிய முறை பரிகாரங்கள் சொல்லி உள்ளார்கள் அவற்றில் ஒன்று தான்:

சனிக்கிழமை அன்று ஒரு கைப்பிடிஅளவு பச்சரிசியை மாவு பதத்துடன் பொடி செய்து(பாதியாக உடைந்த பதம் கூட இருக்கலாம்) காலையில் சூரியநமஸ்காரம் செய்து விட்டு விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயக பெருமான் சுற்றிப் போட்டால், அதை எறும்புகள் தூக்கிச் செல்லும், அப்படித் தூக்கி சென்றாலே சிறிய ஜீவன்களுக்கு உணவளித்த புண்ணியத்தால் நமது பாவங்களில் வலிமை குறைந்துவிடும்.

இந்த பரிகாரம் வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் மிக சிறப்பு. அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசிமாவை முழுவதும் சாப்பிடுவதற்கு எறும்புகள் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும், இதை தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும் அப்படி மாறியதும், சனியின் கெடு பலன் வலு இழந்து போய் விடும். ஏழரை சனி பாதிப்பு விரைவில் நிவர்த்தி ஆகும். இதனால் தான் நாம் பச்சரிசி மாக்கோலம் போடவேண்டும் என்று நம் முன்னோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இந்த எளிய பரிகாரம் சனி பகவானால் நிகழும் கெடு பலன் குறைய பெரிய வரப்ரசாதம் ஆகும்.
.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *