சண்டி நேரம் / முகூர்த்தம்

ஜோதிட சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள பல சுப நேரங்களில் காரிய சித்தி அடைய என்று சில நேரங்கள் நமக்கு கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர். அதில் ஒன்று தான் சண்டி நேரம் என்னும் சூரிய அஸ்தமன நேரம் பின் வரும்  15 முகூர்த்த நேரங்களில் ஒன்று.

சண்டி முஹூர்த்தம் அல்லது சண்டி நேரத்தில் பதவி ஏற்ற நமது முதல்வர் அவர்களுக்கு மிக சிறப்பான யோகமாக அமைந்துவிட்டது ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

சண்டி முகூர்த்தம் என்பது எதிரிகளை அழிக்கும் நேரம். எதிரிகளை எழுத்திருக்க விடாமல் நினைத்ததை வெற்றி பெற செய்யும் அற்புதமான நேரம். சுருக்கமாக “நினைத்ததை நடக்க வைக்கும் நேரம்”.

நமது முதல்வர் அவர்கள் 3வது முறையாக பதவி ஏற்றது 06-12-2016, 1.25 am, சண்டி நேரம் 12.48am to 1.36am சூரிய அஸ்தமனம் இருந்து கணக்கில் எடுத்தது [பொது நேரம் 12.24 am to 1.12 am]

– சென்ற மாதம் வெள்ள பாதிப்பு நிவாரணத்தில் வெற்றி.
– தமிழக மக்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி.
– கிருஷ்னா நதிநீர் கொண்டு வந்ததில் வெற்றி.
– முதல் முறையாக குடியரசு தினத்தில் தேசிய கொடியை ஏற்றியதில் வெற்றி.

இப்படி பதவி ஏற்று 2 மாதத்தில் இமாலய சாதனைகள். தொடரட்டும் பல வெற்றிகள்.

வாராஹி மற்றும் ராஜராஜேஸ்வரி போன்று “சண்டி”யும்  ஒரு படை தளபதி தேவதை. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தேவதை. வரலாற்றில் சோழர்கள் இந்த சண்டி தேவதையை  வணங்கி பூஜைகள் செய்து பல வெற்றிகளை  குவித்தார்கள்.

குறிப்பு:

  • குடுகுடுப்பு காரர்கள் இந்த நேரத்தில் பூஜை செய்து அமானுஸ்ய சக்தி பெற்று அதை  பிரம்ம முகூர்த்தத்தில் வெளிப்படுத்தும் / குறி சொல்லும் சூட்சுமம் இது தான்.
  • புதுமண தம்பதிகள் இந்த நேரத்தில் சேர்த்தால் அவர்கள் நினைத்த குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம் முன்னோர்களின் கூற்று அனுபத்தில் சரியாக வருகிறது.

வாழ்க ஜோதிடம்.

.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *