குரு இருக்கும் இடம் பாழ் – ஜோதிட பார்வை

குருவுக்கு பார்வை பலமே அதிக நன்மை செய்யும். தன காரகன் ஆன குரு பகவான் எப்படி இருக்கும் இடத்தை பாழ்ப்படுத்துவான்? குருவுக்கு பல காரகம் இருப்பின் தனம்/பணம் என்னும் காரகம் மட்டும் பாழ்படுவது காணமுடிகிறது.

செல்வத்துக்கு அதிபதியான சுக்கிரன் குரு வீட்டில் உச்சம். காலத்திற்கு பாதத்தில்(12ம் இடம்) செல்வம் இருக்கவேண்டும், அதாவது செல்வம் இடுப்புக்கு கீழே இருக்கவேண்டும் இதை உணர்த்தவே மஹா விஷ்ணுவின் பாதத்தில் லெட்சுமி தாய் இருப்பதை காணமுடியும்.

பொதுவா குரு நட்சத்திரத்தில்(புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) பிறப்பவர்கள் பெண்களால் பல சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பது அனுபவ உண்மை. (உ.ம்) புனர்பூசத்தில் பிறந்த ஸ்ரீ ராமபிரான் கூனி, கைகேயி, சீதா தேவி மூலம் பட்ட கஷ்டம் கொஞ்சம்நஞ்சம் அல்ல.

இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு. 12ம் இடம் தூக்கம்…

“நிம்மதியான முழுமையான உறக்கம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்”. 12ம் உச்சம் பெரும் சுக்கிரன் அதிக பணத்தை கொடுத்து அதை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில் உறக்கம் தொலைத்து ஆரோக்கியம் கெடுக்கிறது. மேலும் அதே 12ம் இட உச்ச சுக்கிரன் அதிக காம வேட்கை உண்டுபண்ணி ஆரோக்கியம் கெட பாதை காட்டுகிறது. ஆரோக்கியம் கெட்டால் வாழ்க்கை சூனியம் ஆகிவிடுகிறது.

குரு எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அந்த நட்சத்திர அதிபனால் / அந்த அதிபன் எந்த பாவத்திற்கு அதிகாரம் உள்ளதோ அந்த பாவத்தால் பாழ்படுவான். (உ.ம்) குரு சூரியன் நட்சத்திரத்தில் இருந்து சூரி 10ம் அதிபதி என்றால் அரசாங்க வேலை பாழ்படும்.

குரு எந்த பாவத்தில் இருந்தால் பணத்தால் பாழ்படுத்துவார் / கஷ்டங்கள் தருவார்:
1ம் இடத்தில் நேர்மையா சிந்தனையில் பிறருக்கு உதவி செய்யும் போது.
2ம் இடத்தில் சம்பாதிக்க துவங்கியவுடன்
3ம் இடத்தில் சகோதரரால் /உறவினரால்
4ம் இடத்தில் சொத்துக்கள் வசதிகள் வந்தவுடன்
5ம் இடத்தில் குழந்தைகள் பிறந்த பின்
6ம் இடத்தில் தாயின் கூட பிறந்தவர்களால் / தந்தைக்கு பேர் புகழ் கிடைக்கும் போதெல்லாம்.
7ம் இடத்தில் மனைவி வந்தபின்
8ம் இடத்தில் பிறந்த இடத்தில் இருந்தால்/தந்தை இருக்கும் வரை.
9ம் இடத்தில் தூர தேசம் சென்ற பின்
10ம் இடத்தில் கடமையை செய்யாமல் இருந்தால்
11ம் இடத்தில் நண்பர்களால்
12ம் இடத்தில் நிம்மதியான தூக்கம் இல்லாமல்.

இது பொதுவான பலன். அவரவர் ஜாதக யோகம், அவ யோகம், தசா புத்திக்கு ஏற்றவாறு மாறுபடும்.

வாழ்க ஜோதிடம்.

.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *