இன்று விசாகம் நட்சத்திரம்

நான்கு நட்சத்திரம் ஆனா (சில நூல்களில் 2, 5 குறிப்பு உள்ளது) குயவனின் சக்கரம் போன்ற வடிவம் உடையது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருந்தால் தான் அழகான நேர்த்தியான உபயோகமான பொருள் கிடைக்கும்.

விசாக நட்சத்திர அதி தேவதை அக்னி, இந்திரன். இந்திரன் தன் மகளை யுத்த வெற்றியின் பரிசாக அக்னி சொரூபமான முருக பெருமானை மணமுடித்து வைத்ததால், “ஸ்ரீ முருக பெருமான்” இந்த நட்சத்திர தேவதை ஆவார்.

நாலாயிர திவ்விய பிரபந்தங்களில் அதிகமான பாடலை பாடியவருமான “நம்மாழ்வார்” இந்த நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இதில் பிறந்தவர் தெய்வ, சாஸ்திர பற்று உடையவன், நீதி நேர்மை தவறாதவன், பிறருக்கு வழிவிடுபவன், வித்தியாஞானம் உடையவன், காப்பவன், பரிதாப குணம் உடையவன், எளிமையானவன் இன்னும் பிற நற்குணங்கள் உண்டு.

பெரும்பாலும் வயிற்று / செரிமான பிரச்சனையால் அவதிப்படுவான். மனக்குழப்பம் அதிகம். பிறரை பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும் இதனால் தன் உடல்நலம் மீது அதிக அக்கறை காட்டமாட்டான்.
.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *