இன்று மூலம் நட்சத்திரம்

மூலம் என்றால் வேர் என்று பொருள். அங்குசத்தை போன்ற வடிவமுடைய 6 நட்சத்திர தொகுப்பாகும். சிங்கத்தின் வால் போன்ற தோற்றம் உடையது.

நைதிருதி என்னும் அரக்கன் இதன் தேவதை. “ஸ்ரீ ஆஞ்சநேயர்” இந்த நட்சத்திரத்தில் அவதரித்ததால் அதிஷ்ட தேவதை ஆகிறார் ஸ்ரீ ராம பக்தன்.

எதற்கும் மூலம் வேண்டும் என்பார் முன்னோர். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம்(அறியாமை) ஆகியவற்றை சுட்டிக்காட்டும். தெய்வ யோகமும், தோஷமும் தரவல்லது.

சிவந்த கண்கள் உடையவர், போர் குணம் உடையவர், ஓய்வின்றி உழைப்பவர், சிறந்த தீர்க்கதரிசி, கோபம் வந்தால் எதிரியை நிர்மூலம் செய்துவிடுவார். வாக்குவல்லமை உடையவர்.

ஸ்ரீ ராமர் சீதையை பிரிந்த துக்கத்தில் இருக்கும் சமயம் அரக்க நட்சத்திரமான மூலத்தில் வால் நட்சத்திரம் தோன்றியதால் “ராவணனும் அவன் குலமும் அழியும்” என்று இலக்குவனன் ஸ்ரீ ராமரை தேற்றுவதை ராமாயண யுத்தகாண்டத்தில் அறியலாம்.

இதில் 1ம் பாதம், முதல் பாகையில் பிறந்தவர் சாந்தி செய்துகொண்டால் முழு நிறைவான வாழ்க்கை வாழலாம்.

.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *