இன்று பரணி நட்சத்திரம் | Bharani Nakshatra

3 நட்சத்திர தொகுப்பு உடைய பெண் குறி(யோனி) போன்ற அமைப்புடை நட்சத்திரம்.

இதன் அதிதேவதை யம தர்ம ராஜா. பக்தர்களை மரணத்தில் இருந்து காக்கும் வல்லமை துர்கை / காளிக்கு இருப்பதால் “ஸ்ரீ துர்க்கை” இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தேவதை ஆகும்.

பரணியில் பிறந்தால் தரணியை ஆளலாம் என்ற ஜோதிட முதுமொழிக்கேற்ப, பிறந்தது முதல் மரணம் வரை அரச பதவியில் இருந்த “துரியோதனன்” பரணியில் பிறந்தவர் ஆவார்.

இந்த நட்சத்திர தேவதை எமன் ஆதலால் இதில் பிறந்தவர்கள் “எருமை” யை தானம் செய்தால் “அபிமிருத்யு” எனப்படும் துர்மரணத்தில் இருந்து விடுபடலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இதில் பிறந்தவர்கள் அழகானவர்கள், வசீகரமானவர்கள், கடும் செலவாளி / சிக்கன வாதியாக இருப்பான், போஜன பிரியன், பாலில் பிரியமுண்டு, காதல் விருப்பம் உடையவன், தொடங்கிய காரியங்கள் முடியும் வரை முயற்சி உடையவன், பிறரிடம் எப்போதும் ஏதாவது சலுகைகள் உதவிகளை எதிர்பார்ப்பான், வேலையாட்கள் சரியாக அமைவதில்லை.

கும்பகோணம் அருகே உள்ள “பட்டீஸ்வரம்” திருக்கோயிலில் உள்ள சக்தி வாய்ந்த துர்க்கை அம்மனை வழிபட்டால் சகல நன்மைகள் பெறலாம்.
.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *