இன்று சதயம் நட்சத்திரம்

வடமொழியில் சதபிஷா, சததாரா என்பார்கள். அபிஷஜா என்றால் மருத்துவர், சதம் என்றால் நூறு. 100 நட்சத்திர கூட்டம் உள்ள நட்சத்திரம் இதன் தனி சிறப்பு.

இதன் அதிதேவதை மழை கடவுள் என்று அழைக்கப்படும் “வருணன்” ஆவார், இவர் 12 ஆதித்யர்களில் ஒருவன்.

ஆழ்வார்களில் “பேயாழ்வார்” அவதரித்த நட்சத்திரம். சோழ மன்னர்களில் சிறந்த விளங்கிய “ராஜராஜ சோழன்” ஐப்பசி சதயத்தில் பிறந்தார்.

இதில் பிறந்தவர்கள் வழக்காடி எதையும் வெல்லும் சக்தி உண்டு. வாக்கு வல்லமை உடைய வக்கீல், ஜோதிடம், மார்க்கெட்டிங் உட்பட தொழிலில் சிறந்து விளங்குவார்கள், சிறந்த மேடை பேச்சாளர், முன் கோபி, பங்கு சந்தை ஈடுபாடு உண்டு, முதுகில் மச்சம் இருக்கும், பெண்களுக்கு பிரியமானவன்.

கொடுக்கல், வாங்கல், முதலீடு செய்ய, விக்ரஹ பிரதிஷ்டை செய்ய ஏற்ற நட்சத்திரம். ஆனால் பயணம் செய்ய உகந்தது அல்ல.

வளர்பிறை அன்று இந்த நட்சத்திரத்தில் மழை வேண்டி யாகம் செய்தால் நல்ல மழை பெய்யும். அக்டோபர் மாதம் இரவில் வானில் இந்த நட்சத்திரத்தை காணலாம்.

 

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *