இன்று உத்திராடம் நட்சத்திரம்

வடமொழியில் உத்திராஷாடா, என்றால் “பின்னால் யாராலும் பணியவைக்க முடியாது” என்று பொருள். இதில் கடைசி பாதத்தில் அற்புதமான “அபிஜித்” நட்சத்திரம் இருக்கிறது.

இது 8 நட்சத்திரம் கொண்ட கட்டிலின்  பின் கால் அமைப்புடைய நட்சத்திரம். இது தாரா தோஷம் இல்லாத 7 நட்சத்திரங்கள் ஒன்று. எல்லா நல்ல காரியத்துக்கும் பயன்படுவதால் “மங்கள விண்மீன்” என்ற பெயரும் உண்டு.

இதன் தேவதை செல்வம், வலிமை, புகழ், புத்தி ஆகிவை தரும் “விஸ்வம்” என்னும் தேவதை. இந்த உலகை வழிநடத்தும் தேவன், தனக்கு நாயகன் இல்லாதவன் என்ற பொருளில் வேதத்தில் ஆதிகணன் என்று போற்றப்படும் ” ஸ்ரீ விநாயக பெருமான்” இந்த நட்சத்திர அதிஷ்ட தேவதைஆகிறார்.

இதில் மஹாபாரதத்தில் “சல்லியன்” என்னும் அதிரதனும், 63 நாயன்மார்களில் ஒருவரான “ஏனாதிநாதர்” பிறந்தார்கள்.

வேத சாஸ்திரம் கற்றவன், பலவான், அறிவுடையவன், வைராக்கியம் உள்ளவன், ஒழுக்கம் நிறைந்தவன், செய் நன்றி மறவாதவன் , பக்தி மான், பிடிவாதகுணம் உடையவன், தற்பெருமை உடையவன்.

குரு, ஆசிரியர் பணி, வங்கி அதிகாரி, நீதி துறை, மத போதகர் உட்பட விஞ்ஞானம் மற்றும் மெய்ஞான கல்வி அறிவும், ஆழ்ந்த ஆராய்ச்சி அறிவும் உடையவர். மிக சிறந்த வாழ்க்கை வழிகாட்டி.

.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *